29.5 C
Jaffna
March 27, 2023
இந்தியா

ஓ.பன்னீர் செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல்

ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தாயாரின் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி காலமானார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

அந்த இரங்கல் செய்தியில், “முன்னாள் முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று (17 ) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, அவரது தயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Pagetamil

நிகழ்ச்சிகளுக்காக லண்டன் சென்ற இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி

Pagetamil

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

Pagetamil

‘நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்’: எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

Pagetamil

நகை திருட்டு வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் விசாரணை நடத்த முடிவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!