29.5 C
Jaffna
March 27, 2023
சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘போடா போடி’,‘நானும் ரௌடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் அடுத்ததாக அஜித்துடன் இணைந்து ‘ஏகே 62’ படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ‘லவ் டுடே’ படம் மூலம் தனி கவனம் பெற்ற பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும், படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும். இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாயிஷாவின் நடனத்தில் ‘பத்து தல’ படத்தின் ‘ராவடி’ பாடல் வீடியோ

Pagetamil

அஜித் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

Pagetamil

மார்ச் 29 இல் ‘பொன்னியின் செல்வன் 2’ ட்ரெய்லர் வெளியீடு

Pagetamil

நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்

Pagetamil

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!