29.5 C
Jaffna
March 27, 2023
முக்கியச் செய்திகள்

இன்று இலங்கை இயங்காது!

மக்கள் மீது மாபெரும் சுமையை சுமத்தியுள்ள முறையற்ற வரிக்கொள்கையை நீக்க வலியுறுத்தியும், நீர், மின் கட்டணங்கள், வங்கி வட்டியை அதிகரிப்பதற்கு எதிராகவும் நாடு முழுவதும் இன்று (15) 50க்கும் மேற்பட்ட அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் மாபெரும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி வெளியிட்ட தகவலின்படி, துறைமுகம், புகையிரதம், பெட்ரோலியம், வங்கிகள், தபால், கல்வி, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் உட்பட கிட்டத்தட்ட 50 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளன.

அனைத்து புகையிரத ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது மேலாளர் நேற்று அறிவித்தார்.

இதேவேளை, தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று முன்தினம் (13) இரவு வெளியிடப்பட்டது.

இன்று அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் வாபஸ் பெறப்படுவதாகவும், பம்ப் ஸ்டேஷன் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என்றும் நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

திருத்த பணிகள் இடம்பெறாததால் பழுதடையும் இடங்களில் தண்ணீர் விநியோகம் தடைபடும் என்றும், மீட்டர் ரீடிங், பில் வழங்குதல், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல், இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகள் நடைபெறாது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

20,000 ரூபா உதவித்தொகை வழங்குதல், வங்கி வட்டி குறைப்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை குறைத்தல், வரி அதிகரிப்பு, அரச அடக்குமுறையை தடுத்து ஜனநாயகத்தை காத்தல் ஆகிய 6 முக்கிய கோரிக்கைகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒவ்வொரு தொழில்துறையினரும் தத்தமது துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகளிற்கும் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள்.

இதேவேளை, இன்று (15) நடைபெறவிருந்த 9ஆம், 10ஆம், 11ஆம் வகுப்பு தவணை பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறும் என மேல்மாகாண கல்வித் திணைக்களம் நேற்று அறிவித்தது.

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து நீர் விநியோக ஊழியர்களும் இரத்மலானையில் நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பணியிடங்களில் தொழிற்சங்க மட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித நேற்று தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (15) காலை 8.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட பல சுகாதார சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பணிப்புறக்கணிப்பு காலத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாவிட்டாலும் தினசரி மற்றும் பொது சிகிச்சை, வெளிநோயாளர் மற்றும் கிளினிக் சிகிச்சை சேவைகள் முடக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். .

குழந்தைகள் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், புற்றுநோய், சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை மருத்துவமனைகளின் செயல்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தமது சங்கம் பாடுபடும் என்றும் அவர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து நிவாரணம் கிடைத்தால் தொழில்சார் நடவடிக்கைகள் தொடர்பில் மற்றுமொரு தீர்மானத்தை எடுக்கத் தயார் எனவும் கலாநிதி சம்மில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் பணிபுரியும் சுமார் 20,000 வைத்தியர்கள் தமது தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வரி விதிப்பு மற்றும் வங்கி வட்டி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, அதன் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

நேற்று காலை 8.00 மணிமுதல் 24 மணித்தியாலங்களுக்கு ஐந்து மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த விசேட வைத்தியர்கள் சங்கம் இன்று முதல் நாடளாவிய ரீதியில் இதனை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

‘கச்சதீவு தேவாலயத்தில் மிகுந்த பக்தியுடன் கடற்படையினர் சடங்குகள் செய்து வருகிறார்கள்’: புத்தர் சிலைக்கு கடற்படை புது விளக்கம்!

Pagetamil

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

Pagetamil

இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று பேசப்பட்ட விடயங்கள் என்ன?

Pagetamil

ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!