இலங்கை

அரசாங்க அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும்: கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!

இளைய தலைமுறையினரை பாதிக்கும் சமூக சீர்கேடுகளையும் சட்ட விரோதச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை பிரதேசத்திற்கான நன்மைகளாகவும் எமது மக்களுக்கான வாழ்வாதாரமாகவும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்தக் கலந்துரையாடல் கருத்து தெரிவிக்கும் போதே, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பதில் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் மற்றும் துறைசார் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பிரதானமாக போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது உணவுப் பாதுகாப்பு, சட்டவிரோதமான அகழ்வு, கல்வி, சுகாதாரம் இவ்வாறான பல விடயங்கள் இந்த மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற முக்கியமான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“போதைப்பொருள் பாவனை என்பது நாடுதழுவிய ரீதியில் மக்களை, குறிப்பாக இளம் சமுதாயத்தினரைப் பாதித்து வருகின்றபடியால் நாங்கள் அதற்கு முன்னுரிமை கொடுத்து இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் அதற்குரிய நடவடிக்கைகள் விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஊடாக அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது
பற்றி நாங்கள் கலந்துரையாடி அதன் முன்னேற்றம் குறித்து ஆராயும் பொருட்டு இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் கூட இருக்கின்றோம்.

நெல் கொள்வனவு தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களைஅடையாளம் கண்டு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு குறிப்பிட்ட தொகை அரிசியை விநியோகிக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை வெளிப்படுத்தியிருந்தார். அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிலோ நெல்லை 100 ரூபாய் வீதம் கொடுத்து வாங்கும்படி அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 585,832 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30,171 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த குடும்பங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும்.

அதைவிட இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி, சூரியஒளி மின்சாரம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்த பின்னர் சூழலுக்கு பாதிப்பேற்படாத வகையில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கின்றோம்.

எந்தப் பகுதியில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதோ அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு 24 மணித்தியாலமும் தடையில்லாத மின்சாரத்தையும் அப்பகுதி மின் பாவனையாளர்களுக்கு அவற்றைகுறைந்த விலையில் கொடுப்பதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. திட்டத்தை முன்னெடுக்கும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி எமது மக்களுடைய நீடித்த நிலையான ஒரு கௌரவமான வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றைவிட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிப் பங்கீடு சம்பந்தமாகவும் அதனை மீளாய்வு செய்வது தொடர்பாகவும், சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக கண்ணிவெடி அகற்றப்படும் பிரதேசங்களின் வேலைத்திட்டங்கள் பின்தள்ளிச் செல்லப்படுவதாகவும் சொல்லப்பட்டு அது சம்பந்தமாக கலந்துரையாடி முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 72 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் சத்திர சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவித்த அமைச்சர் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தார்.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் – 14.03.2023

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!