இலங்கைக்கு எதிரான பரபரப்பான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசிப் பந்தில் நியூசிலாந்து இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
கேன் வில்லியம்சனின் ஆட்டமிழக்காத 121 ரன்கள் நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டேரில் மிட்செல் 81 ரன்களை பெற்றார். இருவரும் 142 ரன்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இன்று ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டது. நியூசிலாந்து 52 ஓவர்களில் 257 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. இலங்கை 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையிருந்தது.
என்றாலும், கேன் வில்லியம்சனின் அபாரமான 121 ரன்களின் மூலம் இறுதிப்பந்தில் நியூசிலாந்து வெற்றியீட்டியது. டெஸ்டில் இறுதிப் பந்தில் நியூசிலாந்து பெறும் இரண்டாவது வெற்றி இது.
இலங்கை முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்கள். நியூசிலாந்து 373 ஓட்டங்கள்.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 302 ஓட்டங்களை பெற, நியூசிலாந்திற்கு வெற்றியிலக்கு 285 ஆனது. 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை நியூசிலாந்து அடைந்தது.
பிரபாத் ஜெயசூரிய 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.