மினுவாங்கொடை, பொரகொடவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உன்னாறு, மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த சந்து என்ற 30 வயதுடைய மாணிக்குகே பிரபாத் பிரியங்கர என்பவரே நேற்று (16) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற பிணையில் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிள் வந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1