தலதா மாளிகை மற்றும் மகாநாயக்கர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர், மல்வத்து பீடாதிபதி திப்பொடுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில குழுக்கள் சமூக ஊடகங்கள் ஊடாக அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களை பரப்பி வருவதாக பொலிஸ் மா அதிபருக்கும், அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, தலதா மாளிகை மற்றும் மத வழிபாடுகளுக்கு பௌத்த மக்களின் நம்பிக்கை மற்றும் புனிதத்தன்மையை இழிவுபடுத்தும் மற்றும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.