பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிரு்நத நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய நாளை காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பளையிலுள்ள வைத்தியசாலை விடுதியில் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
-ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்-



