கென்யாவில் இளைஞர் ஒருவர் மூன்று சகோதரிகளை திருமணம் செய்துள்ளார்.
கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் கேட், ஈவ் மற்றும் மேரி சகோதரிகள். அவர்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள்.
அவர்கள் நற்செய்தி இசை பயில சென்றனர். அதில் கேட் என்பவர் ஸ்டீவோ என்ற இளைஞரை சந்தித்துள்ளார். அவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஸ்டீவோவிடம் கேட் தனது சகோதரிகளையும் ஆறிமுகப்படுத்தினார்.
முதல் பார்வையிலேயே சகோதரிகளுக்கு ஸ்டீவோவில் காதல் பிறந்து விட்டது. ஆனால், ஸ்டீவோ, கேட்டை மட்டும் காதலித்தார்.
சிறிது காலத்திலேயே, இரண்டு சகோதரிகளின் காதலையும் ஸ்டீவோ ஏற்றுக்கொண்டுள்ளார். மூலருடனும் உறவுகொள்ள ஆரம்பித்தார்.
அண்மையில் 3 சகோதரிகளையும் அவர் திருமணம் செய்து கொண்டார்.
அப்பொழுது அவர், தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என எண்ணி மூன்று சகோதரிகளையும் தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஸ்டீவோ கூறுகையில், 3 பேருடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்களுடன் சமமாக நேரத்தை செலவிட்டு தேவைகளை திருப்திப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
,எந்த சகோதரியுடன் எப்போது தங்குவதென்பதில் அட்டவணை தயாரித்துள்ளார்.
திங்கட்கிழமை, வியாழக்கிழமைகளில் மேரியுடன் இருப்பார். செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமைகளில்கேட் உடன் இருப்பார். புதன்கிழமை, சனிக்கிழமைகளில் ஈவ் உடன் தங்குவார். ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு பேரும் ஒன்றாக தங்கி மிகவும் வேடிக்கையாக இருப்போம் என்றார்.
மேலும் இதுகுறித்து மூன்று சகோதரிகளும் கூறுகையில், நாங்கள் மூன்று பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள். வேறொரு பெண்ணை எங்களது வாழ்க்கைக்குள் கொண்டு வர அவரை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.