29.5 C
Jaffna
March 27, 2023
உலகம்

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,400 ஆக உயர்ந்தது!

துருக்கியின் தெற்கு மாகாணங்கள் மற்றும் சிரியாவின் வடமேற்கு பகுதிகளை உலுக்கிய  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கிய எல்லைகளுக்குள் குறைந்தது 1,498 பேர் இறந்தனர். ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் 810 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை துருக்கியில் இன்று 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.

துருக்கியின் தென் மத்திய பகுதியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தின் பசார்சிக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியது.

துருக்கியில் குறைந்தது 1,498 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,824 கட்டிடங்களை அழித்த நிலநடுக்கங்களில் 8,533 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில், ஆட்சியின் சுகாதார அமைச்சகம் மற்றும் சிரிய குடிமைப் பாதுகாப்புத் துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, அங்கு குறைந்தது 810 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம் 7 கிலோமீட்டர் (4.3 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. காலையில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து. அங்கு மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.  தென்கிழக்கு காசியான்டெப் மாகாணத்தில்் ரிக்டர் அளவுகோலில் 6.6 மற்றும் 6.5 அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் உட்பட 105 பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

 

துருக்கிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம், அண்டை நாடான சிரியாவிலும் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியது. சிரியாவின் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ, ஹமா, லதாகியா மற்றும் டார்டஸ் மாகாணங்கள் நிலநடுக்கத்தில் குறைந்தது 430 பேர் கொல்லப்பட்டனர். றைந்தது 1,315 பேர் காயமடைந்துள்ளனர். சிரிய சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அரச ஊடகமான சனா இதனை தெரிவித்துள்ளது.

 

வடமேற்கு சிரியாவில் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 380 பேர் கொல்லப்பட்டனர். 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சிரிய சிவில் பாதுகாப்பு கூறியது.

வைட் ஹெல்மெட் அமைப்பும் இதனை உறுதி செய்தது.

 

ஏற்கெனவே உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட் சிரியாவில் நிலநடுக்க அழிவு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

“பல குடும்பங்கள் இன்னும் சிக்கியிருப்பதால் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்று போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயல்படும் லைட் ஹெல்மெட்ஸ் மீட்புக் குழு ருவிட்டரில் தெரிவித்துள்ளது.

“எங்கள் குழுக்கள் தரையில் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுகின்றன மற்றும் இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களை அகற்றுகின்றன,” என்று அது மேலும் கூறியது.

நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரினால் சிரியாவின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் நான்கு மில்லியன் மக்களால் நிரம்பிய எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இந்த நிலநடுக்கம் அடித்து நொறுக்கியது. அவர்களில் பலர் அப்பகுதியைச் சுற்றிலும் சிறிய சுகாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் நலிந்த நிலையில் வாழ்கின்றனர்.

டஜன் கணக்கான கட்டிடங்களும் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன. அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள அவசரகால அமைப்பான வைட் ஹெல்மெட்ஸின் தலைவர் ரேட் சாலா, சில பகுதிகளில் முழு சுற்றுப்புறங்களும் இடிந்து விழுந்ததாகக் கூறினார்.

அதோடு, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன்லாந்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய அணுஆயுதங்கள் பெலாரஸிலும் நிலைநிறுத்தப்படும்!

Pagetamil

சிரியாவில் அமெரிக்க தளம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்கா பதில் தாக்குதல்!

Pagetamil

கனடாவில் 1 வருடத்தில் 10 இலட்சம் புதிய குடிமக்கள்

Pagetamil

உக்ரைனுக்கு யுரேனியம் வெடிபொருட்களை வழங்குகிறது இங்கிலாந்து: அபாய கட்டத்துக்கு நகரும் உக்ரைன் போர்!

Pagetamil

உக்ரைன் மீள் கட்டமைப்புக்கு 411 பில்லியன் டொலர் தேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!