வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் வீற்று அருள்பாலிக்கும் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேசக, ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.
அதனையடுத்து எம்பெருமாட்டி உள்வீதியுடாக பீடத்தில் வீற்று திருமஞ்சத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ் உற்சவ கிரியைகளை ஆலய பிரதமகுரு முத்துக்குமாரசாமி தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.
இந்த உற்சவத்தில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றனர்.







What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1