தலங்கமவில் ஜவுளிக்கடை ஒன்றின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த இளம் கணவனும் மனைவியும் கடவத்தை பிரபல புடவைக்கடை ஒன்றின் முன்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவனும் மனைவியும் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்
இவர்கள் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
குறித்த வர்த்தகர் கடந்த 30ஆம் திகதி காணாமல் போயிருந்ததுடன், பெலவத்தையில் உள்ள அவரது சொகுசு மூன்று மாடி வீட்டின் நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் தலங்கம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிலதிபரை கொன்றுவிட்டு, தொழிலதிபரின் சொகுசு கார், கைத்தொலைபேசி மற்றும் பணப்பையுடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
வர்த்தகரை கொலை செய்தமைக்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக சந்தேகநபரான தம்பதிகள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
வர்த்தகரின் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் அந்த பெண்ணும், கணவனும் மருந்து கடையொன்றில் 3 ஆணுறைகளை வாங்கிக் கொண்டு சென்றிருந்தனர்.