இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு இன்னும் ஓரிரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது. விரைவில் எமது மாநாட்டை கூட்டி, எதிர்காலத்தில் எமது இலட்சியத்தை அடைவதற்காக, தமிழர் தேசத்தில் தமிழர்கள் ஆளுவதற்காக, அந்த விடுதலையை- சுதந்திரத்தை பிரகடனம் செய்வதற்காக- அதற்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக அந்த மாநாட்டிலே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
நேற்று (4) மட்டக்களப்பில் நடந்த உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் ஆச்சரியமான முறையில் நாட்டை ஆள்கிறது. தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க, ஆச்சரியமான முறையில் பாராளுமன்றத்திற்கு வந்து, ஆச்சரியமான முறையில் ஜனாதிபதியாகி, ஆச்சரியமான முறையில் ஆட்சி செய்கிறார் என்றும் தெரிவித்தார்.