28.5 C
Jaffna
March 20, 2023
முக்கியச் செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி ஆரம்பம்!

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுடன் இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காலை வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவையிலீடுபவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஹர்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில் இன்றையதினம் அவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தின் ஆரம்பத்தில் பொலிஸார் தடுப்பதற்கு முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடைகளை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டம் ஆரம்பமானது.

இந்த போராட்ட பேரணியானது எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மண்ணில் சிறப்பாக நிறைவடையவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சீனாவை பார்த்து கொஞ்சம் பொறாமைதான்’: புடின்!

Pagetamil

இரண்டாவது டெஸ்டிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

Pagetamil

முல்லைத்தீவு முஸ்லிம் கூட்டணி தவறுதான்… கட்சியின் தலைவர் நானா- மாவைக்கு வந்த குழப்பம்: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நடந்தது என்ன?

Pagetamil

உக்ரைனிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட புடின்!

Pagetamil

இம்ரான்கானின் வீட்டு முகப்பை உடைத்து சோதனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!