நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் இந்தப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தச் சூழலில் ‘பத்து தல’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் கவனம் ஈர்த்து வருகிறது.