29.3 C
Jaffna
March 29, 2024
மலையகம்

பரீட்சை நிலையத்தில் ஆசிரியையின் பேச்சால் விடைகளை மறந்து விட்டேன்: மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

உயர்தர பரீட்சை மண்டபத்தில் விடையெழுதுவதற்கு தாள் தருமாறு கேட்டபோது, பரீட்சை நிலைய கண்காணிப்பாளர் அதை மறுத்து, அநாகரிகமாக பேசியதாக மாணவியொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தளையிலுள்ள தேசிய பாடசாலையொன்றின் உயர்தரப் பரீட்சை நிலையத்தில் உயதர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியே முறைப்பாடு செய்துள்ளார்.

விடை எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், மண்டபத்தில் கண்காணிப்பாளராக கடமையாற்றிய ஆசிரியை ஒருவரிடம், பதில் எழுதுவதற்கு தாள் கேட்டதாகவும், இவளுக்கு ஏன் இவ்வளவு பேப்பர்கள் என ஆசிரியை பதில் அளித்ததாகவும், அவரது மதிலால் அதிர்ச்சியடைந்து விடைகளை மறந்து விட்டதாகவும், சரியாக பரீட்சைக்கு தோற்ற முடியவில்லையென்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஆசிரியை தனது கையடக்க தொலைபேசியில் ஒருவரின் படத்தை காண்பித்து, இவரை தெரியுமா என கேட்டதாகவும், அவரை தனக்கு தெரியாது என கூறியதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment