27.3 C
Jaffna
February 24, 2024
இலங்கை

வசந்த முதலிகேவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள சட்டமா அதிபர் திணைக்களம்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவித்து கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமாஅதிபர் அடுத்த வாரம் கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் இன்று (02) விடுத்த கோரிக்கைக்கு அமைய இது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசந்த முதலிகே கடந்த மாதம் 31ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு இலக்கம் B 80303/01/22 இன் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், குறித்த சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபருக்கு எதிராக எந்தவொரு குற்றமும் கண்டறியப்படவில்லை என கொழும்பு பிரதான நீதவான் தீர்ப்பளித்து, சந்தேக நபரை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆர்.ஆரின் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், சுமந்திரன், டக்ளஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!

Pagetamil

5 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்ற மட்டக்களப்பு இளம் ஜோடி; ஸ்கெட்ச் போட்டு மலையகத்தில் தங்கினரா?

Pagetamil

யாழில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி!

Pagetamil

யாழில் ஆசிரியர் அடித்து காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil

40 வீத இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!