29.5 C
Jaffna
March 27, 2023
உலகம்

LaMDA: ChatGPT-க்கு போட்டியாக விரைவில் கூகுள் களம் இறக்கும் சாட்பாட்

உலகையே கலக்கி வரும் ChatGPT-க்கு போட்டியாக வெகு விரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

பயனர்கள் தங்களது தேடுதலை புதுமையான வழியில் நேரடியாக இன்ட்ராக்ட் செய்து பெற முடியும். இது தேடுதலுக்கு ஒரு துணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் ChatGPT-க்கு மாற்றை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உரையாடல் வடிவில் முடிவுகள் இதில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. LaMDA (Language Model for Dialogue Applications) என இது அறியப்படுகிறது. கடந்த 2021, மே மாதத்தில் மெஷின் லேர்னிங் நுட்பம் என இதனை சொல்லி இருந்தது கூகுள்.

இந்நிலையில், வெகு விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் ஊழியர்கள் இதனை வைத்து சோதனை ஓட்டம் மேற்கொள்ளவும் பணிக்கப்பட்டுள்ளனராம். தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் சார்பில் முதலீடு செய்யப்படும் எனவும் சுந்தர் பிச்சை சொல்லியுள்ளதாக தகவல்.

ChatGPT-யின் வருகை கூகுள் உட்பட பல டெக் நிறுவனங்களுக்கு இம்சை கொடுத்து வருகிறது. வரும் நாட்களில் கூகுளுக்கு மாற்றாக கூட இது இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் கூகுள் இதனை அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய அணுஆயுதங்கள் பெலாரஸிலும் நிலைநிறுத்தப்படும்!

Pagetamil

சிரியாவில் அமெரிக்க தளம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்கா பதில் தாக்குதல்!

Pagetamil

கனடாவில் 1 வருடத்தில் 10 இலட்சம் புதிய குடிமக்கள்

Pagetamil

உக்ரைனுக்கு யுரேனியம் வெடிபொருட்களை வழங்குகிறது இங்கிலாந்து: அபாய கட்டத்துக்கு நகரும் உக்ரைன் போர்!

Pagetamil

உக்ரைன் மீள் கட்டமைப்புக்கு 411 பில்லியன் டொலர் தேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!