இயக்குநர் சிவா, ‘சூர்யா 42’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்நிலையில், இதில் மற்றொரு இந்தி நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் நிகழ்கால போர்ஷனில் திஷா பதானியும், வரலாற்றுப் பகுதியில் மிருணாள் தாகூரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மிருணாள் தாக்கூர், கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘சீதாராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1