29.5 C
Jaffna
March 27, 2023
முக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக மன்னிப்பு கோருகிறேன்; அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்: மைத்திரிபால சிறிசேன!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக நடக்கும் சதிகளுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், எதற்கும் பின்வாங்கும் ஆள் இல்லை என்றும் கூறினார்.

எதற்கும் பின்வாங்கமாட்டேன். எந்த சதிக்கும் அஞ்சமாட்டேன். சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிறேன். எத்தகைய பிரச்சனைகள் கொடுத்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

Pagetamil

இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று பேசப்பட்ட விடயங்கள் என்ன?

Pagetamil

ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

Pagetamil

உக்ரைனுக்கு யுரேனியம் வெடிபொருட்களை வழங்குகிறது இங்கிலாந்து: அபாய கட்டத்துக்கு நகரும் உக்ரைன் போர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!