29.5 C
Jaffna
March 27, 2023
கிழக்கு

கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென 2010 இன் முன் யாரும் கூறவில்லை: அரியநேத்திரன்!

2010 இல் இருந்துதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என முதலாவதாக முன்வைத்தவர்கள் ஈ,பி.எல்.ஆர்.எவ். ஐச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தன் அவர்களும், அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ரெலோவும் இதனைப் பதிவு செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்ட்ட பின்னர் 2004 ஆம் ஆண்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டோம். அதில் நானும் ஒருவர். தேர்தல் முடிந்த பின்னர் நாம் முதன் முதலில் நாடாளுமன்றம் செல்லவில்லை. மாறாக கிளிநொச்சியிலே இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குத்தான் சென்றோம். அதில் அவ்வியக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் இரண்டு விடையத்தை நான் கேட்டிருந்தேன். முதலாவதாக கருனா குழுவிலே இருந்து வாகரையிலே உயிரிழந்த போராளிகளை மாவீரர் பட்டியலில் சேர்க்கவேண்டும், அதற்கு அவர் சம்மதித்தார். இரண்டாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என கேட்டிடேன். அப்போது அவர் தெரிவித்தது என்னவெனில் இக்கூட்டமை;பபை பதிவு செய்யக்கூடாது இதில் உள்ள நான்கு கட்சிகளுக்கும் தனித்தனியே கொள்கைகளும், கோட்பாடுகளும் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியே செயற்படலாம், தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செல்லலாம், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதற்காகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் பதிவு செய்யவிலலை. இதுதான் வரலாறு இதனை மாற்ற முடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மட்டக்களப்பு பெரியகல்லாறு ப்ரித்தி மண்டபத்தில ஞாயிற்றுக்கிழமை(29) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இக்கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என தெரிவிப்பவர்கள் எல்லாம் 2010 ஆண்டுக்கு முன்னர் எவரும் கூறியிருக்க வில்லை. 2018 ஆம் ஆண்டு முதல் தடவையாக தேர்தல் இடம்பெற்றபோது அதனை எவ்வாறு எதிர்கொள்வது என மட்டக்களப்பில்தான் நாங்கள் கூடி முடிவெடுத்திருந்தோம்.

அதில் அனைவரும் வட்டாரங்களுக்குச் சென்று பொதுவேபட்பாளர்களைத் தேரிவு செய்ய வேண்டும் அதில் எந்த கட்சியினதும் பெயர்கள் பாவிப்பது இல்வை என முடிவெடுத்திருந்தோம். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எமது தீர்மானம் மாற்றப்பட்டது. அதன் பிற்பாடுத்தான் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கு பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டன. அதில் ஏற்பட்ட முதண்பாடு காரணமாக எமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராசா அவர்கள் தான் தேர்தல் பிரசாரத்திற்கு வரமுடியாது என அதிலிருந்து விலகியிருந்தார். இதுதான் வரலாறாகும்.

1949ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்ததற்குப் பிற்பாடு 1956ஆம் ஆண்டு மட்டக்களப்பிலே இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜதுரை, சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களையும் இனம்கண்டிருந்தார். இவர்களுடாகத்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம் என்ற விதை விதைக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரைக்கும் பட்டிருப்புத் தொகுதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொகுதியாக இருந்து வருகின்றது.

1976.மே.16 ஆம் திகதி வட்டுக்கோட்டையிலே எடுக்கப்பட்ட சுதந்திர தமிழீழம் எனும் பிரகடனத்திற்குப் பிற்பாடு, அதன் ஆணையைப் பெறுவதற்கு வடகிழக்கிலிருந்து 23 வேட்பாளர்கள் தொகுதி ரீதியாக களமிறக்கப்பட்டபோது கணேசலிங்கம் அவர்கள் போட்டியிட்டடிருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிய ஆரம்பிக்கப்ட்டடு 1949 ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு வரையிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகேவே போட்டியிட்டுருந்தது. 1972 ஆம் ஆண்டு, தமிழர் கூட்டணி என்று உருவாக்கப்பட்டாலும்கூட 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையிலே எடுக்கப்பட்ட சுதந்திர தமிழீழம் என்ற ஆணையைப் பெறுவதற்காக 1977ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணியாக அது சங்கமித்தது. அதனை ஆரம்பிப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்கள் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களேதான். பின்னர் 1976ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையிலும் அனைத்து தேர்திலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகத்தான் நாம் போட்டியிட்டிருந்தோம்.

பின்னர் 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக சங்கமித்தது. பின்னர் 2001டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 15பேர் நாடாளுமன்றத்திற்கும் தேர்வு செய்யப்பட்டிருந்து அப்பொது வடகிழக்கில் 70சதவீத நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் தன்னாட்சி அதிகார செயற்பாடுக்ளை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது 14நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏக பிரதிநதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனந்தசங்கரி அவர்கள் மாத்திரம் அதற்கு இணங்கியிருக்கவில்லை. பின்னர் 2004இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் குழப்ப நிலை ஏற்பட்டது, பின்பு கிளிநொச்சியிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது என ஆலோசனை வழங்கப்பட்டது. இதுதான் வரலாறாகும். 2004 ஆம் ஆண்டிலிருந்து வீட்டுச்சின்னத்திலேதேன் நாம் போட்டியிட்டு வருகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலியின் தாயாரை டிக்டொக்கில் வெருட்டிய 17 வயது காதலன் கைது!

Pagetamil

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

Pagetamil

போதைப்பொருள் கடத்தல்காரரை தப்பிக்க வைக்க பொலிசார் மீது தடியடி நடத்திய 4 பெண்கள் கைது!

Pagetamil

பஸ் மோதியதில் பெண் பலி

Pagetamil

மாவடிப்பள்ளியில் இலைக்கறி பறித்துக் கொண்டிருந்தவர் முதலை கடித்து பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!