இந்தியாவில் சைவ சமய தலைமைத்துவ பயிற்சியை கற்றுக்கொண்டு வடமாகாணம் திரும்பிய சிவ தொண்டர்களை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் வவுனியாவில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
சைவ சமய ஒழுக்கங்கள் மற்றும் தலைமைத்துவ வழிகாட்டி பயிற்சி நெறிக்காக வவுனியாவை சேர்ந்த சிவசேனை அமைப்பின் சிபாரிசில் சுமார் எட்டு பேர் பயிற்சிக்காக இந்தியா சென்றனர்.
சென்னை சின்மயா மிசனில் இவர்களிற்கான பயிற்சிகள் நடந்தன.
இவ்வாறு சென்றவர்கள் தமது மூன்று மாத கால பயிற்சியை நிறைவு செய்து திரும்பி நிலையில் அவர்களை சிவ சேனை அமைப்பினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1