29.8 C
Jaffna
March 29, 2024
சினிமா

உலக அளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் வாரிசு

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் 16 நாட்களில் ரூ.275.69 வசூலித்துள்ளதாகவும், விரைவில் ரூ.300 கோடியை எட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் ஓரளவு நல்ல வருவாயை ஈட்டி வருவதாக தெரிகிறது.11 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுக்க ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.193.94 கோடியும், வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டொலர்களும் வசூலித்து உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.275.69 கோடியுடன் வசூலில் முன்னேறி வருகிறது. விரைவில் படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

Pagetamil

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

Leave a Comment