24.9 C
Jaffna
January 29, 2023
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (27.1.2023 – 2.2.2023)

சூரியன், சுக்கிரன் நன்மையை வழங்குவர். சூரிய வழிபாடு நன்மையளிக்கும்.

அசுவினி: வாரத்தின் முதல் நாளில் செயல்களில் விழிப்புணர்வும் செலவில் கவனமும் தேவை. அதன்பின் உங்கள் முயற்சிகள் நன்மையாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

பரணி: வெள்ளியன்று முயற்சிகள் இழுபறியாகும். செயல்களில் எச்சரிக்கை அவசியம். அதன் பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறத்தொடங்கும். முயற்சிக்கேற்ப பலன் உண்டாகும். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் முன்னேற்றத்தை வழங்குவார்.

கார்த்திகை 1ம் பாதம்: சூரிய பலத்தால் சாதனை புரிவீர்கள் என்றாலும் வெள்ளியன்று எச்சரிக்கை அவசியம். அதன் பின் உங்கள் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஜீவன ஸ்தான சனி பகவானும் லாப சுக்கிரனும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை வழங்குவர்.

கேது, புதன், குரு நன்மைகள் வழங்குவர். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

கார்த்திகை 2, 3, 4: வெள்ளியன்று முயற்சிகள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். சனி, ஞாயிறில் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. திங்கள் முதல் செயல்களில் ஆதாயம் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரோகிணி: பிரதான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் நினைப்பது நிறைவேறும். முயற்சிக்கேற்ற ஆதாயத்தை அடைவீர்கள். சனி, ஞாயிறில் உங்கள் செயல்கள் இழுபறியாகும். சங்கடம் தோன்றும். அதன்பின் நிலைமை சீராகும். வருமானத்தில் உண்டான தடை விலகும்.

மிருகசீரிடம் 1, 2: நற்பலன் காணும் வாரம் இது. வெள்ளியன்று செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். சனி, ஞாயிறில் முயற்சி இழுபறியாகும். சில சங்கடங்கள் உண்டாகும். திங்கள் முதல் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும். முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும்.

சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். திருநள்ளாற்று நாயகனை மனதில் எண்ணி வழிபட வளம் கூடும்.

மிருகசீரிடம் 3, 4: விருப்பம் பூர்த்தியாகும் வாரம் இது. இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். திங்கள் முதல் புதன் மாலை வரை செயல்களிலும் செலவிலும் கவனம் தேவை.

திருவாதிரை: லாப ஸ்தான ராகுவால் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் புதுமையை புகுத்துவீர்கள். தடைபட்ட வருவாய் வர ஆரம்பிக்கும். முயற்சி வெற்றி பெறும். திங்கள் முதல் புதன் மாலை வரை செயல்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு தோன்றும்.

புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திங்கள் காலை வரை செயல்கள் எளிதாக நிறைவேறும். அதன்பின் கவனித்து செயல்பட வேண்டியதாக இருக்கும். மற்றவரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.

சுக்கிரன், புதன், குரு, செவ்வாய் நன்மை வழங்குவர். குருபகவானை மனதில் எண்ணி வழிபடுங்கள்.

புனர்பூசம் 4: லாபஸ்தான செவ்வாயும், பாக்கிய குரு பகவானும் நற்பலன் வழங்குவர் என்பதால் திட்டமிட்ட செயல்களில் லாபம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை அமையும், திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

பூசம்: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள், வழக்கு வெற்றியாகும் என்றாலும் நான்காமிட கேதுவும் ஏழாமிட சனியும் உடல் நிலையில் சில சங்கடங்களை உண்டாக்குவர் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

ஆயில்யம்: உங்கள் செயல்களை நிறைவேற்றிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். செவ்வாயும், குருவும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவர். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் சில சங்கடம் உண்டாகும். புதன் மாலை முதல் செலவு அதிகரிக்கும்.

கேது, சனி, சூரியன் நன்மை வழங்குவர். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.

மகம்: வாரத்தின் முதல் நாளில் செயல்களில் கவனம் தேவை. சனிக்கிழமை முதல் எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்கள். லாபம் அதிகரிக்கும். உடல்நலனில் இருந்த சங்கடம் விலகும். எதிரிகளின் தொல்லை அகலும்.

பூரம்: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனால் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ஞானகாரகனால் தைரியமுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் உண்டாகும். வெள்ளியன்று அனைத்திலும் கவனம் தேவை.

உத்திரம் 1: ஆறாமிட சூரியனால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும். மூன்றாமிட கேதுவால் முயற்சி லாபமாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பொருளாதார நிலை உயரும்.

சந்திராஷ்டமம்: 25.1.2023 இரவு 7:54 மணி – 28.1.2023 நள்ளிரவு 12:24 மணி

புதன், குரு நன்மையை வழங்குவார்கள். வளம் தரும் வேங்கடவனை வழிபடுங்கள்.

உத்திரம் 2, 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும் குரு பார்வையால் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சனிக்கிழமையில் சில தடைகள் தோன்றும்.

அஸ்தம்: குரு பலத்தால் உங்கள் நிலை உயரும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும். அரசு ஊழியர்களின் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் இறங்குவர். சனி, ஞாயிறன்று செயல்களில் கவனம் தேவை.

சித்திரை 1, 2: இரண்டாமிட கேதுவால் வார்த்தைகளால் சங்கடம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசு வழி செயல்கள் ஆதாயமாகும். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். ஞாயிறன்று சில நெருக்கடி உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 28.1.2023 நள்ளிரவு 12:25 மணி – 30.1.2023 காலை 7:00 மணி

சுக்கிரன் நன்மையை வழங்குவார். வினைகள் தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.

சித்திரை 3, 4: பெரும்பாலான கிரகங்கள் எதிர்மறையான பலன்களை வழங்கி வரும் நிலையில், உங்கள் ராசிநாதன் உங்களுக்கு நன்மை வழங்குவார். உங்கள் ஜீவனஸ்தான அதிபதி சந்திரனால் முயற்சிகள் வெற்றியாகும். அரசு ஒப்பந்தங்கள் லாபம் தரும். திங்களன்று செயல்களில் கவனம் தேவை.

சுவாதி: இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த வாரமாகும். வேலை வாய்ப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் பணவரவை ஏற்படுத்துவார். செவ்வாயன்று சில தடைகள் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3: மனக்காரகனும் உங்கள் தொழில் ஸ்தானாதிபதியுமான சந்திரனின் சஞ்சாரத்தால் வியாபாரம் வளர்ச்சி பெறும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பலிதமாகும். புதனன்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.

சந்திராஷ்டமம்: 30.1.2023 காலை 7:01 மணி – 1.2.2023 மாலை 4:57 மணி

புதன், சனி, சூரியன், சுக்கிரன், குரு, ராகு நன்மைகளை வழங்குவார்கள். திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் குறையும்.

விசாகம் 4: புதனன்று மாலை வரையில் உங்கள் மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். வியாழனன்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

அனுஷம்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் விருப்பங்கள் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை செல்லும் வியாபாரம் சிறக்கும். பணியாளர்கள் சிறப்படைவீர்கள். பொருளாதார நிலை உயரும். எதிரி தொல்லை விலகும்.

கேட்டை: கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் ஆதாயம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். எண்ணம் நிறைவேறும். வருமானத்திற்குரிய செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

சந்திராஷ்டமம்: 1.2.2023 மாலை 4:58 மணி – 5.2.2023 அதிகாலை 3:25 மணி

சுக்கிரன், செவ்வாய், கேது நன்மை வழங்குவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

மூலம்: ஆறாமிட செவ்வாயால் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த ஒன்றிலும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் முயற்சிகளில் லாபம் உண்டாகும். லாபஸ்தான கேதுவால் நேர்மையான செயல்களில் நன்மை உண்டாகும்.

பூராடம்: மூன்றாமிட சுக்கிரனால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். யோசித்து செயல்படுவீர்கள். ஆறாமிட செவ்வாயால் உடல்நிலை சீராகும். உற்சாகம் அதிகரிக்கும். முயற்சிகளில் அக்கறை உண்டாகும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உத்திராடம் 1: நன்மைகள் நிறைந்த வாரமிது. வரவேண்டிய பணம் வந்து சேரும். முயற்சிகள் லாபமாகும். குடும்ப வழியில் நன்மைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் உண்டான பிரச்னை விலகும். எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

சுக்கிரன், சந்திரன் நன்மையை வழங்குவார்கள். சிவனை எண்ணி வழிபட வளமுண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4: ஜென்மச்சனி, சூரியனால் செயலில் குழப்பம் டென்ஷன் ஏற்பட்டாலும் வாரம் முழுவதும் சுக்கிரனும் சந்திரனும் நன்மைகளை வழங்குவார்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல்களில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

திருவோணம்: ஜென்மச் சனி, சூரியன் காரணமாக உங்கள் முயற்சியும் கடுமையான உழைப்பும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். இரண்டாமிட சுக்கிரனால் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சந்திர பலத்தால் முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்கள்.

அவிட்டம் 1, 2: வாரத்தின் முதல் நாளே விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வாரம் முழுவதும் முயற்சிகள் லாபமாகும்.

சுக்கிரன், குரு, ராகு, புதன் நன்மைகள் வழங்குவார்கள். மகாலிங்கேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.

அவிட்டம் 3, 4: எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். அரசு வகையிலான முயற்சிகள் நன்மையில் முடியும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

சதயம்: திட்டமிட்ட செயல்களில் லாபமடைவீர்கள். நீண்ட நாளாக முயற்சித்த செயலில் சாதகமான நிலை தோன்றும். தைரியம் அதிகரிக்கும். நினைத்த செயல்களை நினைத்தபடி செய்து முடிக்க சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும்.

பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு வெளியூர் வாசம் ஏற்படும். அரசுப்பணியாளர்கள் எண்ணம் பலிதமாகும். தைரியமாக செயல்படக்கூடிய மனநிலை உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை.

செவ்வாய், புதன், சூரியன், சனி, சுக்கிரன், புதன், சுக்கிரன் நன்மையை வழங்குவார்கள். குலதெய்வத்தை எண்ணி வழிபட வளமுண்டாகும்.

பூரட்டாதி 4: கடந்த வாரம் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சிகள் அனுகூலம் பெறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் வழியே நன்மைகள் காண்பீ்ர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். லாப சனியால் புதிய முயற்சிகள் வெற்றியாகும்.

உத்திரட்டாதி: எண்ணங்கள் நிறைவேறும். வாரம் இது. திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். பணிபுரியும் இடத்தில் ஆரோக்கியமான சூழல் உண்டாகும். வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் சில சங்கடத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள் என்பதால் பேச்சில் கவனம் தேவை.

ரேவதி: உங்கள் அனுபவ அறிவால் முயற்சிகளில் நன்மை அடைவீர்கள். மூன்றாமிட செவ்வாயால் செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் சந்தோஷம் இல்லாமல் போகும். ஆயுள் ஸ்தான கேதுவால் உடல் நிலையில் சங்கடம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
4
+1
3
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம்

Pagetamil

காரைநகர் சிவன் இரதோற்சவம்

Pagetamil

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவ அபிஷேக ஆராதனை

Pagetamil

2023 புத்தாண்டு ராசிபலன்கள் எப்படி?: மீனம் ராசி

Pagetamil

2023 புத்தாண்டு ராசிபலன்கள் எப்படி?: கும்பம் ராசி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!