30.7 C
Jaffna
March 29, 2024
இந்தியா

நுங்கு சாப்பிட்டால் பெண்களின் மார்பகம் பெரிதாகுமாம்: சிக்கலில் சித்த வைத்தியர்!

நுங்கு சாப்பிட்டால் பெண்களின் மார்பகம் பெரிதாகும் என சமூக ஊடகங்களில் தவறாக விளக்கமளித்த சித்தவைத்திய பெண் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

பாஜக நிர்வாகியான டெய்சி சரணின் மகள் ஷர்மிகா. இவர் சித்த மருத்துவர். பொதுமக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உடல் சம்மந்தமான பிரச்சினைகளை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பேசி வரும் டாக்டர் ஷர்மிகா சமூக ஊடகங்களில் பிரபலமாகினார். ஆனால், அதற்குள் சர்ச்சையில் சிக்கி தற்போது வீடியோ வெளியிடுவதையும் குறைத்துள்ளார்.

அண்மையில், இவர் மாட்டு கறியை சாப்பிடக்கூடாது, அது ஒரு குல தெய்வம். நம்மை விட பெருசாக இருக்கும் விலங்குகளை நாம் சாப்பிட்டால் செரிக்காது, அதனால் உடல் பாதிக்கப்படும் என்று பேசியது பயங்கர சர்ச்சையானது. அதனை தொடர்ந்து, நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகங்கள் பெருசாகும், குளோப் ஜாமூன் சாப்பிட்டால் உடல் எடை கூடும், கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும் என்று கூறியிருந்தார்.

இதற்கு மருத்துவ துறையில் இருப்பவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் ஷர்மிகா மீது விமர்சனங்கள் வர தொடங்கின. இந்த நிலையில், மாட்டு கறியை குறித்து சித்த மருத்துவத்தில் குறிப்புகள் இல்லை என்று ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார். அத்துடன் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டாக்டர் ஷர்மிகா டெங்கு, மலேரியா மற்றும் குலாப் ஜாமுன் குறித்து ஒரு ஃப்லோவில் பேசியதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டும் அண்மையில் வீடியோ வெளியிட்டார்.

இதற்கிடையே தவறான மருத்துவ குறிப்புகளை கூறி வருவதாகவும் அதுகுறித்து டாக்டர் ஷர்மிகா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்தநிலையில், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகினார்.

ஷர்மிகா இதுவரை பேசியுள்ள மருத்துவ குறிப்புகளை குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அனைத்து கேள்விக்கும் எழுத்துமூலம் பதிலளிப்பதாக ஷர்மிகா தெரிவித்ததையடுத்து, பெப்ரவரி 10ஆம் திகதிக்குள் விளக்கமறியக்க உத்தரவிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment