கண்டி கம்பளையில் தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தை கொள்ளையடித்த குழுவினர் பயன்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனத்திற்குள் சாரதி கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, கம்பளையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தை இன்று (25) அதிகாலை தனிநபர்கள் குழுவொன்று கழற்றி அகற்றியுள்ளது.
நள்ளிரவு 12.40 மணியளவில் முகமூடி அணிந்த நான்கு நபர்கள் வேனில் வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிவிட்டு கம்பளை கண்டி வீதியில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பிடப்படாத பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கம்பளை பொலிஸாரால் குறித்த குழுவைக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.