முறையற்ற விதத்தில் யாழ்ப்பாண மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்ட் வடமாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனால் இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை (25) வழக்கு விசாரணை எடுக்கப்படவுள்ளது.
தேர்தல் கட்டளை சட்டத்தின் படி, இரண்டு முறை பாதீடு தோற்கடிக்கப்பட்ட சபையில் ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்டதால் பதவிவிலகிய ஒருவர் அதேசபைக்காலத்தில் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசுரித்தது சட்டவிரோதம் என குறிப்பிட்டு, சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1