27.3 C
Jaffna
November 9, 2024
Pagetamil
கிழக்கு

கோறளைப்பற்று பிரதேச சபையை தமிழ் அரசு கட்சி கைப்பற்றியது!

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் கனகரத்தினம் கமலநேசன் 4 மேலதிக வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (24) காலை தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பின்போது இவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
இன்றைய அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர். இதன்போது கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கா.நடராசா, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் க.கமலநேசன் ஆகிய இருவரும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டனர்.

இதன்போது நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழ் அரசு கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட க.கமலநேசன் என்பருக்கு 12 வாக்குகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட கா.நடராசா என்பருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

தமிழ் அரசு கட்சி, ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் புதிய தவிசாளரை ஆதரித்தனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 2 பேரும் ஜக்கிய தேசிய கட்சியில் 01 வரும் என 3 பேர் நடு நிலை வகித்தனர்.

கோறளைப்பற்று பிரதேச சபையானது கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆளுகைக்குள் இருந்து வந்தது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்ததினால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் தவிசாளராக இருந்த திருமதி சோபா ஜெயரஞ்சித் என்பரது தவிசாளர் பதவியானது வறிதாக்கப்பட்டது. இன்றைய கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கிழக்கு மாகாண ஆய்வு உத்தியோகஸ்த்தர் என்.ஜங்கரன் ஆகியோர்கள் நிர்வாக உத்தியோகஸ்த்தர்களாக கடமையாற்றினார்கள்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் வைத்தியரின் மனைவி குத்திக்கொலை

Pagetamil

அறுகம்குடாவுக்கு வந்தவர்களுக்கு வெடிகுண்டு பீதியேற்படுத்தியவர் கைது!

Pagetamil

நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொளுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள் – வேட்பாளர் பிரகாஷ் காட்டம்

Pagetamil

வேட்பாளரின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது

Pagetamil

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதால் ஏற்படும் அபாயங்கள்!

Pagetamil

Leave a Comment