29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

ஆவா குழு ரௌடிகளிற்குள் மோதல்: நடு வீதியில் வாகனங்களால் மோதி மோதல்… வாள்வெட்டு; யாழில் எல்லைமீறும் அட்டகாசம்!

யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் ஆவா குழு ரௌடிகள் வாகனங்களால் மோதி விபத்தை ஏற்படுத்தி, வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவா குழு ரௌடிகளிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, அந்த குழுவிற்குள்ளேயே இந்த மோதல் நடந்தது.

இன்று பகல் சுன்னாகம் சந்திக்கு அண்மையில் இந்த பயங்கர மோதல் நடந்துள்ளது.

கார் ஒன்றில் வந்த ஆவா குழுவினரை, மகேந்திரா வாகனமொன்றில் வந்த மற்றொரு பிரிவு ஆவா குழுவினர் தாக்கியுள்ளனர். தமது வாகனத்தினால் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, காருக்குள் இருந்த ஆவா குழுவினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காருக்குள் இருந்த 4 ஆவா குழுவினர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்பகலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

ஆவா குழு ரௌடிகளிற்குள் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இரு குழுவாக பிரிந்து இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

கழிவுநீர் வெளியேறும் குழியில் விழுந்து கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் இருவர் பலி!

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான கோடீஸ்வர வர்த்தகரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

Pagetamil

வசந்த முதலிகேக்கு எதிரான மனு விசாரணை ஏப்ரல் 3ஆம் திகதி

Pagetamil

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!