தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி, ஒற்றுமையை விரும்பும் மக்களின் வெற்றியென சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தற்போது தலைவராக இரா.சம்பந்தன் செயற்படவில்லையென்றும் தெரிவித்தார்.
அத்துடன், யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
3
+1
+1
3
+1
+1
+1