31.3 C
Jaffna
March 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடன அரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டுப்பாட்டாளர் கென்னித் மெஜியா ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

Leave a Comment