24.9 C
Jaffna
January 29, 2023
உலகம்

தரக்குறைவான செய்திக்கு மன்னிப்பு கோரிய பிபிசி

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து செய்தி வெளியிட்டது. ஆனால், அது பாலியல் பாகுபாட்டுடன் கூடிய தரக் குறைவான தலைப்பை வைத்து சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிபிசி தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது.

“Can women have it all?” என்ற தலைப்பில் முதலில் செய்தி வெளியிட்டது பிபிசி. பெண்களால் எல்லாம் முடியுமா என்பதை குறிக்கும் விதமாக இந்தத் தலைப்பு இருந்தது. இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு பதவி விலகிய பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட ஆடவர் அரசியல் தலைவர்களின் செய்தி கவரேஜ் குறித்து ஒப்பிட்டு சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், பெண்கள் மீதான வெறுப்புணர்வை பிபிசி வெளிப்படுத்துகிறது எனவும் சொல்லி இருந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த தலைப்பை “அழுத்தம் காரணமாக பிரதமர் பதவி விலகுவதாக தெரிகிறது” என பிபிசி மாற்றியது.

“எங்கள் தரப்பில் அந்தக் கட்டுரைக்கான தலைப்பு சரியானதாக இல்லை என அறிந்து கொண்டோம். தொடர்ந்து அதை மாற்றினோம். மேலும், அது தொடர்பான ருவீட்களை நீக்கினோம்” என பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 41 பேர் பலி

Pagetamil

பங்களாதேஷ் துறைமுகத்தில் அசந்து தூங்கிய சிறுவன் தவறுதலாக கொள்கலனில் அடைக்கப்பட்டு 6 நாளின் பின் மலேசியாவில் தரையிறங்கினான்! (VIDEO)

Pagetamil

அமெரிக்காவில் கறுப்பர்களிற்கு எதிராக தொடரும் கொடூரம்: அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர் பொலிஸ் வன்முறையில் பலி!

Pagetamil

டென்மார்க்கில் மசூதி, துருக்கி தூதரகத்தின் எதிரில் குர் ஆன் எரிப்பு!

Pagetamil

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!