Pagetamil
குற்றம்

யாழில் ஆட்களற்ற வீட்டில் இரவை கழித்த 15 வயது மாணவியும், காதலனும்!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் 15 வயது மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்களற்ற வீட்டில் தங்கியிருந்த நிலையில் இருவரும் பொலிசாரால் கண்டறியப்பட்டனர்.

கரவெட்டி மேற்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

15 வயதான மாணவியை காணவில்லையென பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மறுநாள் காலையில் காணாமல் போன மாணவியும், காதலனும் ஆட்களற்ற வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர்.

காதலியுடன் தங்கியிருந்த 23 வயதான காதலன் கைது செய்யப்பட்டார்.

15 வயதான சிறுமி விருப்பத்துடன் காதலனுடன் சென்றிருந்தாலும், சிறுமி உரிய பராயமடையாததால், பாலியல் வன்புணர்வு வழக்கை எதிர்கொள்ளும் இளைஞன், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமி மருத்துவ பரிசோதனைகளிற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

Leave a Comment