28 C
Jaffna
December 5, 2023
உலகம்

ஹெலிகொப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 18 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்துள்ளனர்.

கீவ் நகரின் ப்ரோவாரி என்ற பகுதியில் ஒரு குடியிருப்புக்கு அருகே ஹெலிகொப்டர்  விழுந்து நொறுங்கியது. இதில் உயிரிழந்தனர்.

உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, பிரதி உள்துறை அமைச்சர், உள்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஹெலிகொப்டரில் இருந்த பேரும் உயிரிழந்தனர்.

15 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் பிரான்ஸ் வழங்கிய Aérospatiale AS.332 Super Puma ஆகும்.

ஹெலிகொப்டர் விபத்து ஒரு ‘பயங்கரமான சோகம்’ என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிடிடெலிகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

“கிய்வ் பிராந்தியத்தின் ப்ரோவரியில் இன்று ஒரு பயங்கரமான சோகம் நடந்தது. அவசர சேவையின் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

உயிரிழந்தனர்களில் உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, அவரது முதல் துணை யெவன் யெனின், உள்துறை அமைச்சகத்தின் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் ஹெலிகொப்டர் பணியாளர்கள் உள்ளனர்” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ஹெலிகொப்டருக்கு என்ன ஆனது என்பதை விசாரிக்க உக்ரைனின் பாதுகாப்பு சேவை மற்றும் தேசிய காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாலத்தீவிலிருந்து படைகளை வெளியேற்ற இந்தியா இணக்கம்’: ஜனாதிபதி முய்ஸு

Pagetamil

கணவன்- மனைவி தகராறினால் தரையிறக்கப்பட்ட விமானம்!

Pagetamil

பிரான்ஸ் கத்திக்குத்தில் சுற்றுலாப் பயணி பலி

Pagetamil

பிலிப்பைன்ஸ் குண்டுவெடிப்பில் 4 பேர் பலி

Pagetamil

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!