இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஜே.ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் இன்று (14) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன்வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமருக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள காரணத்தினால், ஜகத் ரோஹண அவர் தரப்பில் போட்டியிட்டார்.
56 கால்பந்து லீக்குகள் வாக்களித்தன.
27 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ ரங்கா இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஜகத் ரோஹன 24 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்து மாதங்களுக்கு அந்தப் பதவிகளில் பணியாற்றுவார்கள்.
இந்த ஆண்டு மே 31 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் அதிகாரப்பூர்வ தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1