25.5 C
Jaffna
January 29, 2023
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியஸ் ஓய்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ் தொழில்முறை ரீதியிலான ரி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான டுவைன் பிரிட்டோரியஸ் தென்னாபிரிக்க அணிக்காக 30 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி, 27 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ரி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பிரிட்டோரிஸ் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க வீரர்களில் சிறந்த பந்து வீச்சு சாதனையை பதிவு செய்திருந்தார்.

டுவைன் பிரிட்டோரியஸ் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இனிமேல் தொழில்முறை டி 20 லீக்குகளிலும் மற்ற குறுகிய வடிவிலான கிரிக்கெட்டிலும் எனது கவனத்தை செலுத்தப்போகிறேன்” என்றார்.

2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ரி20 உலகக் கோப்பை தொடரில் டுவைன் பிரிட்டோரியஸ் 9 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். துடுப்பாட்டத்தில் 164.15 ஸ்டிரைக் ரேட்டுடன் 261 ரன்கள் சேர்த்தார். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ரி20 லீக்குகளில் டுவைன் பிரிட்டோரியஸ் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், தி ஹண்ட்ரடு தொடரில் வெல்ஷ் ஃபையர், சிபிஎல் மற்றும் எஸ்ஏ 20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் டுவைன் பிரிட்டோரியஸ் இடம் பெற்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், ஜோகோவிச்

Pagetamil

‘நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையில்லை, இன்னொரு முறை இப்படி ஆடினால்…’: தோனியை எச்சரித்த ரவி சாஸ்திரி

Pagetamil

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை தடை செய்தது ஃபிஃபா!

Pagetamil

சக வீரரின் காதலியுடன் பாபர் ஆசாமிற்கு தொடர்பு?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!