28.3 C
Jaffna
June 16, 2024
மருத்துவம்

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

மருத்துவத்துறை சார்ந்த உங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் எழுதி அனுப்புங்கள். தமிழ் பக்கத்தின் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ (0766722218) அல்லது pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

ப்ரதியூஷா (23)
சுன்னாகம்

எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. என் குடும்பத்தினர் எங்கள் தேனிலவுக்காக, 10 நாட்கள் மலையக பகுதிகளில் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், வருங்கால கணவர் அதை விரும்பவில்லை. ஒரே ஒரு இடத்துக்குச் சென்று, தனிமையில் இருவரும் பழக வேண்டும் என்கிறார். இதில் எது சரி?

டாக்டர் ஞானப்பழம்: 

நிச்சயம் ஒரே இடத்துக்குச் செல்வது என்பதுதான் அர்த்தம் உள்ளது. தேனிலவு செல்வதன் நோக்கமே, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான், பல இடங்களைப் பார்ப்பது அல்ல. இதற்கு, வாழ்க்கையின் இன்னும் பெரும் பகுதி காத்திருக்கிறது. எனவே, ஒரே இடத்துக்குச் செல்வது நல்லது. அது, மலைப்பிரதேசம் அல்லது கடற்கரைப் பகுதி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். திருமணத்துக்காக ஜோடிகள் மேற்கொண்ட அலைச்சல், அவஸ்தைகளில் இருந்து மனஅமைதி, உடல் ஓய்வு பெறும் வகையில் ஒரு இடத்தைத் தேர்வுசெய்வது நல்லது. அப்போதுதான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் உச்சத்தை அடைவதற்கான வழிகளைக் காண முடியும்.

பல இடங்கள் செல்ல திட்டமிட்டால், தினமும் பயணத்திலேயே நாட்கள் கழியும். ஏற்கெனவே, சோர்வில் இருக்கும் உடலும் மனமும் மேலும் சோர்வடையும். இதனால், தாம்பத்தியத்தில் சிறப்பாக ஈடுபட முடியாது போகலாம்.

ஜி.மதிவதனன் (26)
ஹொரவப்பொத்தானை

என் ஆண் உறுப்பு துர்நாற்றம் வீசுகிறது. இதை எப்படித் தவிர்ப்பது?

டாக்டர் ஞானப்பழம்: 

ஆண் உறுப்பில் வாசம் ஏற்படுவது பொதுவானதுதான். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் ஆண் உறுப்பின் உட்புறத் தோல் பகுதியில் மெழுகு போன்ற படிவு உருவாகும். தினமும், குளிக்கும்போது, அதை நன்கு கழுவ
வேண்டும். அப்படி கழுவவில்லை என்றால், அது துர்நாற்றத்தை உருவாக்குவதோடு, கிருமிகள் உருவாகவும் காரணமாகிவிடும்.

ஆண்கள், ஆணுறுப்பின் தோலைப் பின்னுக்குத் தள்ளி, அதில் படிந்திருக்கும் படிவுகளைக் குளிக்கும்போது தினமும் சுத்தப்படுத்த வேண்டும். அந்தப் படிவம் ஆணுறுப்பின் தோலுக்கு அடியில் படிவதுதான் துர்நாற்றம் வர காரணம். இதை ‘ஸ்மெக்மா’ என்பர்.

அதேபோல், சிறுநீர் கழிந்தபிறகு, தங்கும் சில சொட்டுகள் நம் உள் ஆடையில் படியும். தினமும் உள்ளாடையை சோப்பினால் சுத்தம் செய்வதனாலும் ஆணுறுப்பின் தோல் உட்பகுதியை சோப்பினால் சுத்தம் செய்வதனாலும் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம். தொடை இடுக்குகளில் கசகசப்பினால் உருவாகும் அழுக்குகளையும் குளிக்கும்போது நன்கு சுத்தப்படுத்துவது அவசியம்.

குளித்த ஈரம் நன்றாகக் காய்ந்த பிறகே உள்ளாடைகளை அணிய வேண்டும். அதே போல உள்ளாடைகள் நன்கு காய்ந்தபிறகுதான் அணிய வேண்டும். ஈரமான உள்ளாடைகள் ஃபங்கஸ் தோன்றுவதற்குக் காரணமாகிவிடும். சிலருக்கு ஃபங்கஸ் காரணமாக படை, தேமல் ஏற்பட்டு, புண்கள் ஏற்படுவதாலும் கெட்ட நாற்றம் ஏற்படும்.

முறையற்ற உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு கொனோரியா உள்ளிட்ட பால்வினை நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இவை காரணமாக துர்நாற்றம் வரலாம். நல்ல மருத்துவரை அணுகி உடனடியாக அதற்கான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும்.

பெயர் குறிப்பிடாத பெண் வாசகி

அக்குள், பெண் உறுப்பில் இருக்கும் முடியை அகற்றுவது அவசியமா?’

டாக்டர் ஞானப்பழம்: 

அது அவரவர் விருப்பம். பெண் உறுப்பைச் சுற்றியிருக்கும் முடி சுத்தமாக இருக்கும்பட்சத்தில், அதை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால், உடலுறவின்போது முடியானது க்ளிட்டோரியஸைத் தூண்டுவதற்கு உதவுகிறது. விந்துச் சுரப்பிகள் முடியில் படியும் வாய்ப்பு இருப்பதால், முடியைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். இல்லை எனில் பக்டீரியா படை எடுக்க வாய்ப்பு உண்டு. சுத்தமாக வைத்திருக்க வாய்ப்பு இல்லாதவர்கள் முடியை அகற்றுவது பற்றியோ, ட்ரிம் செய்வது பற்றியோ யோசிக்கலாம்.

அக்குள் முடி, அதிகம் வியர்க்கும் இடத்தில் இருப்பதால், பக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதி. குளிக்கும்போது சுத்தம் செய்வதும், பவுடர் ஒத்தடம் கொடுப்பதும் அவசியம். ஸ்லீவ்லெஸ் பனியன், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிபவர்கள் அவசியம் அக்குள் முடியை அகற்றிவிட வேண்டும்.’

பெயர் குறிப்பிடாத வாசகி (22)
முல்லைத்தீவு

நான் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன். சக நண்பர் ஒருவருடன் ஒரேயொரு முறை உடலுறவு கொண்டேன். அதன் பின் எனக்கு மிகப்பயமாக உள்ளது. ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்குமா?  

டாக்டர் ஞானப்பழம்: 

வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

உங்களிற்கு கருத்தரித்தல் செயன்முறை பற்றிய குழப்பம் உள்ளதால் சுருக்கமாக அதை குறிப்பிடுகிறேன்.

‘கன்சீவ்’ என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையில் இருந்து உருவானது. ‘கன்சிஃபையர்’ என்ற லத்தீன் வார்த்தைக்கு ஏற்றுக்கொள்ளுதல் என அர்த்தம். ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபாலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபாலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14ஆம் நாளில் (மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14வது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.

இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது.

இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.

ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்துபோகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.

உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பது இப்போது உங்களிற்கு புரிந்திருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

பெண்களிற்கு பாதுகாப்பான கருத்தடை முறை எது?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment