Pagetamil
சினிமா

அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர்

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் – ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது.

மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர்

கருப்பு முகமூடியை கழற்றி சிரிக்கும் அஜித்தின் அறிமுகக் காட்சி ரசிக்க வைக்கிறது. அதேபோல இரண்டு கைகளிலும் இரண்டு துப்பாக்கியுடன் ஆக்ரோஷம் காட்டும் மஞ்சு வாரியர் ‘அட’ என ஆச்சரியப்பட வைக்கிறார். பணத்தை பிரதானமாக கொண்ட கதைக்களத்தில் அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை அவரது வசனங்களும், அந்த ‘நக்கல்’ சிரிப்பும் உறுதி செய்கிறது. மீண்டும் ‘மங்காத்தா’ பாணியை அஜித் கையிலெடுத்திருப்பதை அவரது ஆட்டம் – ஆர்ப்பாட்டக் காட்சிகள் உணர்த்துகின்றன. ட்ரெய்லரில் பின்னணி இசை கவனிக்க வைக்கும் இந்த ட்ரெய்லரில் அஜித்தின் குட்டி நடனம் சர்ப்ரைஸ்.

துப்பாக்கிகளுக்கும் அதிலிருந்து தெறிக்கும் தோட்டாக்களுக்கும் குறைவில்லாத ட்ரெய்லரில் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் எனத் தெரிகிறது. மொத்த ட்ரெய்லரிலும் அஜித்தின் லுக்கும், அவரது சின்ன சின்ன உடல்மொழியும் ரசிக்க வைக்கிறது. ஆனால், ட்ரெய்லர் முழுவதும் ‘மணி ஹெயிஸ்ட்’ இணையத் தொடர் மற்றும் பாக்யராஜ் படமான ‘ருத்ரா’வை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படத்தின் இந்த ட்ரெய்லர் அஜித் ரசிகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு ட்ரீட் தான் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்

ஈழத் தமிழ் பின்புலத்தில் காமெடி ஏன்? – சசிகுமார் பகிரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’அனுபவம்

Pagetamil

பாதுகாப்பற்ற நீர்க்குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

Pagetamil

‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’

Pagetamil

“அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை” – சிம்ரன் விமர்சிப்பது யாரை?

Pagetamil

இலட்சக்கணக்கில் பணம் கொட்டி தென்னிந்திய நடிகைகளை அழைத்து மகிழும் புலம்பெயர் தமிழர்கள்!

Pagetamil

Leave a Comment