நடிகை துனிஷா ஷர்மா படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்த விவகாரத்தில், அவரது ஆண் நண்பரும் சக நடிகரான ஷீசன் கான் கைது செய்யப்பட்டதாக வாலிவ் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை தெரிவித்தனர்.
அவருக்கு எதிராக ஐபிசி பிரிவு 306 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
மராட்டியத்தில் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனீஷா சர்மா (20) சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
தேநீர் இடைவேளையில் நடிகை துனீஷா கழிவறைக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த தகவல் கிடைத்து நாங்கள் சென்று, கதவை உடைத்து சென்றோம். இதில், துனீஷா தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
போலீசார் விசாரணை நடத்தினர். தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளனர்.
இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் துனீஷாவுடன் இருந்தவர்கள், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், தொடரில் நடித்து வரும் சக நடிகரான ஷீஜன் கான் என்பவர் மீது துனீஷாவின் தாயார் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷீஜன் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை போலீசார் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
ஷீஜன் கான் தன்னை தொந்தரவு செய்ததாக அவரது உறவினர்களிடம் துனீஷா தெரிவித்துள்ளார். அவர்கள் அதைப் பற்றி நடிகரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வெளிப்படையாக கருத்து வேறுபாடுகள் இருந்தன, இது நடிகைக்கு நிறைய காயத்தை ஏற்படுத்தியது. முன்னர் இருவரும் காதல் உறவில் இருந்ததாக கருதப்படுகிறது.
நடிகை துனீஷாவின் இன்ஸ்டகிராம் பதிவுகளில், ஷீஜன் கானுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும், அவர் பற்றிய உணர்வுபூர்வ விபரணங்களும் காணப்பட்டன. இருவரும் காதல் உறவில் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது.
இதற்கிடையில் நடிகை துனீஷா இறக்கும் போது கர்ப்பமாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று வெளியாகும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அது தெளிவாகும்.
#TunishaSharma’s last Instagram story was 5 hours before she committed suicide. The video is from her TV set.#TunishaSharmadeath #Suicide pic.twitter.com/52XcD71pDB
— Kritika vaid (@KritikaVaid91) December 24, 2022
முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா – மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். தவிர, இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தொடர் தவிர, இந்தி திரைப்படங்களான பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங் மற்றும் தபாங் 3 ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.