27 C
Jaffna
December 30, 2024
Pagetamil
உலகம்

ஐநா செயலாளர் ரஷ்யாவிற்கு அடிபணிந்து விட்டார்: அமெரிக்கா!

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் “வெளிப்படையாக ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்தார்” என்றும், ஈரானால் வழங்கப்பட்டதாகக் கூறும் ரஷ்யா பயன்படுத்தும் ட்ரோன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை உக்ரைனுக்கு அனுப்பவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனில் தனது படைகள் ஈரானிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா மறுத்துள்ளது. அத்துடன், ட்ரோன்களின் தோற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா அதிகாரிகள் உக்ரைன் செல்ல எந்த ஆணையும் இல்லை என்று வாதிடுகிறது.

ஈரான் ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் பெப்ரவரியில் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பு அவை அனுப்பப்பட்டதாகக் கூறியது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை ரஷ்யாவுக்கு வழங்குவது ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை உள்ளடக்கிய 2015 ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகக் கூறுகின்றன. ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரெஸ் உக்ரைனுக்கு குழு அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத் தீர்மானத்தின் மீது திங்களன்று நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க துணை ஐ.நா தூதர் ரொபர்ட் வுட் கூறுகையில், “இந்த அறிக்கை மீறல் குறித்து சாதாரண விசாரணையை மேற்கொள்ள ஐ.நா. நகரவில்லை என்று நாங்கள் வருந்துகிறோம்.

“ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்த செயலகம், இந்த கவுன்சில் வழங்கிய விசாரணை ஆணையை நிறைவேற்றாததால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்” என்று வூட் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பாதகாப்பு கவுன்சிலுக்கு அளித்த அறிக்கையில், ஐ.நா அதிகாரிகள் கிடைக்கக்கூடிய தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும், ஏதேனும் கண்டுபிடிப்புகள் இருந்தால் உரிய நேரத்தில் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும் என்றும் குட்டரெஸ் கூறினார்.

திங்களன்று அவர் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து கேட்டபோது, குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை ஈரான் ரஷ்யாவுக்கு வழங்கியது என்ற மேற்கத்திய குற்றச்சாட்டை,
போரின் சூழலில் நாம் செய்கிற எல்லாவற்றின் பரந்த படத்தில், நாம் எப்போது செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் தீர்மானிப்போம் என்றார்.

ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா திங்களன்று பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா அதிகாரிகள் “மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு பணியக்கூடாது” என்றும் “இந்த போலி விசாரணையின் முடிவுகள் எதுவும்… செல்லாது” என்றும் கூறினார்.

பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் ஈரான் ரஷ்யாவுக்கு மாற்றவில்லை என்று ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி கூறினார். பெப்ரவரிக்கு முன்னர் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் கவுன்சிலால் தடை செய்யப்படவில்லை என்றும், “உக்ரைனில் நடந்து வரும் மோதலில் பயன்படுத்துவதற்கு மாற்றப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

அவர் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று விவரித்தார் மற்றும் “மோதலை நீடிப்பதற்காக மேற்கத்திய நாடுகள் பாரிய அளவிலான மேம்பட்ட அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றியதில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி” என்று குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Update 2 – தென்கொரிய விமான விபத்து

east tamil

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

east tamil

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

Leave a Comment