கெட்ட வார்த்தை சொன்னதற்கு தண்டனை; முன்பள்ளி சிறுவனின் வாயில் சூடு வைத்த ஆசிரியர்: யாழில் பெற்றோர் முறைப்பாடு!

Date:

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில்...

சட்டவிரோத சொத்து குவிப்பு: யாழில் விற்பனை நிலையத்தில் சோதனை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின்...

வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் சிரிய தலைவர்!

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்