அல்வாரெஸ்- மெஸ்ஸி மேஜிக்: குரோஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

Date:

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா.

முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. என்றாலும், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி முதல் கோல் அடித்தார்.

இந்த கோல் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவின் கோல் எண்ணிக்கையை மெஸ்ஸி தொடங்கிவைக்க அவருக்கு பக்கபலமாக இருந்தது அணியை முன்னிலை பெறவைத்தது ஜூலியன் அல்வாரெஸ். இன்றைய ஆட்டத்தின் ஹீரோ இவர் எனலாம். ஏனென்றால், மெஸ்ஸி கோல் அடித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் சிறப்பான கோல் ஒன்றை அடித்து முதல் பாதியில் குரோஷியாவை விட 2 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறவைத்தார்.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 69வது நிமிடத்திலும் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்து கெத்து காட்டினார். இதனால் அர்ஜென்டினா 3 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. மெஸ்ஸி மற்றும் அல்வாரெஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள குரோஷியா பல முறை முயன்றும் முடியவில்லை. ஆட்டத்தின் இறுதியில் 3 – 0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக நடப்பு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

35 வயதான மெஸ்ஸி தலைமையிலான இளமையும், அனுபவமும் வாய்ந்த அர்ஜெண்டினா கட்டார் உலககோப்பையை வெல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில், சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்திருந்தது அர்ஜெண்டினா. அப்பொழுது அணி மீது பலத்த விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ஆனால் அதன் பின்னர் அர்ஜெண்டினா ஆடியது சாதாரண கால்பந்தாட்டமல்ல. அது வேறு லெவல் ஆட்டம்.

இன்றைய கோலுடன், கட்டார் உலககோப்பையில் 5 கோல்கள் அடித்து, தொடரில் அதிக கோலடித்தவர் பட்டியலில் பிரான்சின் கைலியன் எம்பாவேயுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மெஸ்ஸி இப்போது கட்டார் 2022 இல் மூன்று பெனால்டிகளை அடித்துள்ளார் – யூசிபியோ (போர்ச்சுகலுக்கு 1966 இல் நான்கு) மற்றும் ராப் ரென்சன்பிரிங்க் (1978 இல் நெதர்லாந்திற்காக நான்கு) மட்டுமே ஒரு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்துள்ளனர்.

1978ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா, 1986இல் டீகோ மரடோனா தலைமையில் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மகுடம் சூடும் முனைப்புடன் விளையாடிய அர்ஜென்டினா இப்போது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2வது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். 2014இல் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த இறுதி ஆட்டத்திலும் மெஸ்ஸி பங்கேற்றிருந்தார். கிளப்களில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காக கோபா அமெரிக்கா பட்டம் மட்டுமே வென்றுள்ளார். அவரது கோப்பை சேகரிப்பில் உலக சாம்பியன் பட்டம் மட்டுமே வறட்சியாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

Glücksfeder und Nervenkitzel Chicken Road Casino bietet 98% Auszahlungsquote, vier Schwierigkeitsgra

Glücksfeder und Nervenkitzel: Chicken Road Casino bietet 98% Auszahlungsquote,...

Faszinierende Kaskaden und hohe Gewinne erwarten dich bei BGaming’s Plinko – dem Spiel mit 99% Ausza

Faszinierende Kaskaden und hohe Gewinne erwarten dich bei BGaming’s...

காமுகனுக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்