மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த புயலால் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்ந்து வட உள் மாவட்டங்கள் வழியாக நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 75 கி.மீ வேகம் வரை பதிவாகி உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1