சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல காதல் ஜோடிகளில் ஒன்றான சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானியின் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உத்தியோகபூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் விரைவில் அவர்களின் திருமணம் நடக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தகவலின்படி, சண்டிகரில் திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, அவர்கள் கோவாவில் திருமணம் செய்ய விரும்பியிருந்தனர், ஆனால் சித்தார்த்தின் பஞ்சாபி குடும்ப பின்னணி காரணமாக, தற்போது திருமணம் சண்டிகர்ருக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருமண திகதி மற்றும் நேரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் சரியாக நடந்தால் 2023 ஆரம்பத்தில் சித்தார்த்- கியாரா பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஜோடியாக மாறக்கூடும்.