சிறந்த ஃபோர்மில் விளையாடி வரும் பிரான்ஸ் இளம் வீரர் கைலியன் எம்பாப்பே, பல உலகக் கோப்பை சாதனைகளை படைப்பார் என கருதப்படுகிறது. 23 வயதான அவர், இந்த உலகக்கோப்பையின் “மிக ஆபத்தான்“ வீரராக உருவெடுத்துள்ளார்.
கைலியன் இதுவரை, வீரர் இரண்டு உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒன்பது உலகக் கோப்பை கோல்களைப் பெற்றுள்ளார். இந்த உலகக்கோப்பையில் 5 கோல்கள் அடித்து, தங்கக்காலணியை பெறும் வீரர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார். லியோனல் மெஸ்ஸி, ஒலிவியர் ஜிரோட், மார்கஸ் ராஷ்போர்ட் தலா 3 கோல்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
எம்பாப்பே, தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பைகளில் நான்கு கோல்களை அடித்த முதல் பிரெஞ்சு வீரர் ஆனார். ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கோப்பையில் நான்கு கோல்களை அடித்தவர், கட்டார் உலகக் கோப்பையில் நான்கு ஆட்டங்களில் ஐந்து கோலடித்துள்ளார்.
23 வயதான எம்பாப்பேவுக்கு முன், பிரேசில் ஜாம்பவான் பீலே உலகக் கோப்பையில் ஐந்து கோல்கள் அடித்த இளம் வீரர் ஆவார்.
ஜெர்மனியின் க்ளோஸ் நான்கு உலகக் கோப்பைகளில் 16 கோல்கள் அடித்து உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். க்ளோஸின் சாதனைகளை எம்பாப்பே முறியடிப்பார் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரான்ஸ், டிசம்பர் 11ஆம் திகதி அல் பைட் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஒரே உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்சின் ஃபோன்டைன் படைத்துள்ளார். வீரர் 1958 உலகக் கோப்பையில் மட்டும் 13 கோல்களை அடித்தார்.
எம்பாப்பே, மேலும் 5 கோல்களை அடித்தால் ஃபோன்டைனின் சாதனையை முறியடிக்க முடியும். பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பையில் எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாத பட்சத்தில் அதிகபட்சமாக 3 போட்டிகளில் விளையாடும்.