26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
விளையாட்டு

காலிறுதிக்கு முன்னேறின பிரான்ஸ், இங்கிலாந்து!

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஒஃப் 16 போட்டியில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது பிரான்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நடப்பு சம்பியனான அந்த அணி.

கட்டாரின் அல் துமானா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் வெற்றிக்காக பலப்பரீட்சை செய்தன. இருந்தாலும் அதில் பிரான்ஸ் அணிக்கே வெற்றி கிடைத்தது. மொத்த ஆட்ட நேரத்தில் பிரான்ஸ் அணி 55 சதவீதமும், போலாந்து 45 சதவீதமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

பந்தை வலைக்குள் தள்ளுவதில் மிகவும் தீவிரமாக பிரான்ஸ் வீரர்கள் இருந்தனர். முதல் பாதி ஆட்டம் முடிய கடைசி சில நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருக்க பிரான்ஸ் வீரர் ஒலிவர் ஜிரூட், தன் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

இரண்டாவது பாதியில் 74 மற்றும் 91வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தினார் எம்பாப்பே. பின்னர் 99வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் போலந்தின் லெவோண்டஸ்கி. இருந்தாலும் அது அந்த அணிக்கு ஆறுதல் கோலாகவே அமைந்தது.

முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.

கடந்த 2018 ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணிதான் சம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதியில் பிரான்ஸ் அணி? இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

நேற்று கோல் அடித்ததன் மூலம் பிரான்ஸில் அதிக கோலடித்தவர்கள் பட்டியலில் தியரி ஹென்ரியை கடந்து முதலிடத்திற்கு முன்னேறினார் ஜிரூட். அவர் தனது 117வது போட்டியில் 52 கோல்களை எட்டினார், ஒரு ஆட்டத்திற்கு 0.44 கோல்கள் ஸ்ட்ரைக் ரேட். ஹென்றி 123 சர்வதேச போட்டிகளில் விளையாடி 51 கோல்கள், ஒரு ஆட்டத்திற்கு 0.41 கோல்கள்.

மற்றொரு குரூப் 16 ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என செனகலை வீழ்த்தியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment