குளத்தில் நீராடிய போது நேற்று காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..
அப்பகுதியிலுள்ள சப்ரா என்ற குளத்தில் நீராடுவதற்காக நேற்று மாலை குறித்த குடும்பஸ்தர் சென்றுள்ளார்.
எனினும் நீண்ட நேரமாகியும் குறித்த குடும்பஸ்தர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் தேடிச் சென்றுள்ளனர்.
ஆயினும் அங்கும் குடும்பஸ்தரைக் காணவில்லை என தேடிய போது குளத்தில் நீராடிய தனை கண்டதாக சிலர் கூறியிருந்தனர்.
இதனையடுத்து குளத்தில் நீராடிய போது நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்றுமாலை முதல் இரவிரவாக அப்பகுதி மக்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் குடுபஸ்தரை காணவில்லை என்பதால் இன்று காலை முதல் அப்பகுதி மக்களும் பொலிஸார் எனப் பலரும் தொடர்ச்சியாக குளத்தில் தேடினர்.
இவ்வாறு நீண்ட நேர தேடுதலின் பின்னர் குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.