29.5 C
Jaffna
March 28, 2024
குற்றம்

யாழில் காலாவதியான பொருட்களை விற்ற 12 வர்த்தகர்களிற்கு ரூ.3 இலட்சம் தண்டம்!

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம் யாழ்நகர், குருநகர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு, பலசரக்கு கடைகளில் திடீர் பரிசோதனை மேற்கொண்டது.

இதன்போது யாழ். நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார் பண்ணை பகுதியில் ஓர் கடையும், திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதன் உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கினர்.

திகதி காலாவதியான பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள், கடை உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14.11.2022ம் திகதி வழக்கு தாக்கல் செய்தனர். இன்றையதினம்  அவ்வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து கடை மொத்தமாக 305,000/= தண்டப்பணமாக செலுத்துமாறும், திகதி காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment