24.8 C
Jaffna
January 30, 2023
உலகம்

சீனாவுடனான பிரிட்டனின் பொற்காலம் முடிந்துவிட்டது: ரிஷி சுனக்

சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சீனா உடனான வெளியுறவு குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது, “தற்போதைய காலகட்டங்களில் உலக அளவில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது. நாங்கள் பனிப்போர் போன்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை.

சீனா நமக்கு பெரிய சவாலை முன் வைக்கிறது. ஹொங்கொங்கின் சுதந்திரத்தை குறைக்கும் ஜி ஜின்பிங் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைக்கலாம். சீனாவை அணுகுவதில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாம் மேற்கொள்ள இருக்கிறோம். சீனா மற்றும் இந்தோனேசியாவுடனான உறவில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது. பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை புதிய ஆண்டில் வெளியிடப்படும். இது காமன்வெல்த் நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கும். ” என்று தெரிவித்துள்ளார்.

உலக விவகாரங்களில் – உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை அல்லது காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பலர் இதை புரிந்துகொள்கிறார்கள் என்றார்.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டு பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 41 பேர் பலி

Pagetamil

பங்களாதேஷ் துறைமுகத்தில் அசந்து தூங்கிய சிறுவன் தவறுதலாக கொள்கலனில் அடைக்கப்பட்டு 6 நாளின் பின் மலேசியாவில் தரையிறங்கினான்! (VIDEO)

Pagetamil

அமெரிக்காவில் கறுப்பர்களிற்கு எதிராக தொடரும் கொடூரம்: அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர் பொலிஸ் வன்முறையில் பலி!

Pagetamil

டென்மார்க்கில் மசூதி, துருக்கி தூதரகத்தின் எதிரில் குர் ஆன் எரிப்பு!

Pagetamil

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!