வங்கி ATM அட்டைகளை திருடி, அதிலிருந்து பணத்தை எடுத்து போதைப்பொருள் வாங்கி, சூதாட்ட விடுதிகளில் செலவிட்ட முன்னாள் CTB ஊழியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கபுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
400,000 ரூபா மோசடி செய்ததாக ஒரு முறைப்பாடும், மற்றைய முறைப்பாட்டில் 120,000 ரூபா மோசடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் எப்படி மோசடி செய்தார் என்பது தெரிய வந்தது.
ATM இயந்திரத்தில் அட்டையை செருகும் துளைக்குள் பொலித்தீன் பைகளை செருகியுள்ளார். அங்கு பணம் எடுக்க வருபவர் அந்த துளைக்குள் அட்டையை செலுத்தும் போது, அட்டை சிக்கிக் கொள்ளும். அப்போது சந்தேகநபர் முன் வந்து அட்டையை மீட்டெடுக்க உதவுகிறார்.
அட்டையை வெளியே எடுத்தவுடனே, உரிமையாளர் அலட்சியமாக இருக்கும் தருணத்தில், உரிய அட்டையை மறைத்து விட்டு, வேறு அட்டையை கொடுப்பார்.
இப்பொழுது சரியாக செயற்படுகிறதா என பார்ப்பதை போல பாவனை செய்து, அந்த நபர் இரகசிய பின் இலக்கத்தை குத்தும் வரைஇயந்திரத்திற்கு அருகில் காத்திருந்தார். பின் இலக்கத்தை மனப்பாடம் செய்த பிறகு, அவர் அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்திற்குச் சென்று, அவர் திருடிய அmட்டையில் இருந்து அதிகபட்ச தொகையை எடுத்துள்ளார்.